சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ் ஐ.. சிசிசிடிவி காட்சியை வெளியிட்ட சென்னை மாநகர ஆணையர்..

 சென்னை: சென்னையில் திருட்டு பைக்கில் வந்து மொபைல்களை வழிபறி செய்யும் திருடர்களை பின்தொடர்ந்த எஸ்ஐ ஒருவர் பின்னர் தனி ஒருவராக போராடி 3 பேரை பிடித்தார். அவர்களிடம் இருந்து 11 திருட்டு மொபைல்களை பறிமுதல் செய்தார். இது தொடர்பான சிசிசிடிவி காட்சியை சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். 

சென்னையில் வழிபறி திருடர்கள் அதிகம். எங்கு எப்போது வந்து கையில் உள்ள பணத்தை, நகையை, மொபைலை பறிப்பார்கள் என்பது தெரியாது. கவனமுடன் இல்லாதவர்களை குறிவைத்தோ அல்லது கவனத்தை திசை திருப்பியோ வழிபறி செய்து வருகிறார்கள்.




இவர்கள் திருடிய சமயத்தில் உடனே கையில் சிக்கினால் தான் வழிபறி செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. ஏனெனில் இவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிவிடுவார்கள். அவர்களின் அடையாளமும் தெரியாது. திருட்டு பைக்கில் வந்திருப்பார்கள். 

இந்த சூழலில் மொபைல் வழிபறி கொள்ளையர்களை துணிச்சலுடன் போராடி பிடிததுள்ளார எஸ்ஐ அண்டிலின் ரமேஷ். சென்னை மாநகராட்சி ஆணையர் மகேஷ் அகர்வால் எஸ்ஐயை வெகுவாக பாராட்டி உள்ளார்.

அவர் சிசிடிவி பதிவை வெளியிட்டுள்ளதுடன், அதற்கு மேல் பதிவில், இது ஏதோ சினிமா படத்தில் வரும் காட்சியும் அல்ல. ஆனால் நிஜ வாழ்க்கை ஹீரோ எஸ்.ஐ.அண்டிலின் ரமேஷ் தனி ஒருவராக போராடி திருடர்களை பிடித்தது. திருடப்பட்ட பைக்கில் சவாரி செய்யும் மொபைல் வழிபறி கொள்ளையர்களை பின்தொடர்ந்த ரமேஷ் அவர்களை பிடித்தார். இது மூன்று குற்றவாளிகளை கைது செய்ய வழிவகுத்தது மற்றும் 11 பறிக்கப்பட்ட மொபைல்களை மீட்டெடுக்க வழிவகுத்தது" என்று பாராட்டி உள்ளார். எந்த காவல் நிலைய எஸ்ஐ என்பது குறித்து தகவல் இல்லை.